இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றத் தொடங்கியபோது, அதிகளவான பிரதிநிதிகள் சபை அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக சர்வதேச அளவில் அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டு ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில், காசா போருக்கு இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
நெதன்யாகுவின் உரை தொடங்கியபோது பிரதிநிதிகள் குழுவாக அரங்கிலிருந்து வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!